1. விநாயகர் துதி
கைத்தல நிறைகனி யப்பமொடு அவல் பொறி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பக மெனவினைக் கடித்தேகும்
மற்றமும் மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொருள் திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்க்கோடு பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவனுறைரதம்
அச்சது போடி செய்த அதிதீரா
அத்துயரது கொடுசுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை யிபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.
2. விநாயகர் துதி
மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா
பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினனே
சங்கரனார் திருமதவாய் சங்கடத்தைச் சம்கரிக்கும்.
எங்கன்குல விடிவிளக்கே எழில்மணியே கண்பதியே!
அப்பமுடன் பொரிகடவை அவனுடனே அருங்கதலி
ஒப்பில்லா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எமையாள வேண்டுமென
அப்பனவன் மடியமரும் அருட்சுனியே கணபதியே!
பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்கும் உக்கியிட்டு
என்னளவும் சவியாத எம்மனத்தை உமாகாங்கித
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றோம்
உள்ளியதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே
இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகளார். தன்னுடனே றிஎழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியெனப் போற்று கின்றோம்!