அபிராமி அம்மைப் பதிகம் – 1காப்பு தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதம், நால்வாய், ஐங் கரன்தாள் வழுத்துவாம் – நேயர்நிதம்எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள்அபி ராமவல்லிநண்ணும்பொற் பாதத்தில் நன்கு நூல்கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு துன்பம் இல்லாத வாழ்வும், துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப், பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்;அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே! ஆதி கடவூரின் …